அன்னையே, நாங்கள் உம்மிடம் வரும்போது, எவ்வளவு நல்லவர்களாக இருக்க முடியுமோ அவ்வளவு நல்லவர்களாக இருக்க விரும்புகிறோம். அதாவது மிக நல்ல சிந்தனைகளுடன் வர விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் அதற்கு மாறாக பகலில் எங்களிடமிருந்த எல்லாத் தீய தூண்டுதல்களும் தீய சிந்தனைகளும் முன்னுக்கு வருகின்றன.
ஒருவேளை நீ அவற்றை நீக்கிவிடுவதற்கு வசதியாக அவை வரலாம். அவை வந்தால் அவற்றை அர்ப்பணித்து அவை உன்னிடமிருந்து நீங்கவேண்டும் என்று கேட்கலாம். அதுவேதான் காரணமாக இருக்கலாம், உயர் உணர்வு தூய்மை செய்வதற்காக வேலை செய்வதால் அவ்வாறு நடக்கலாம். குறைகளை மறைப்பதில் பயனில்லை, அவற்றைப் பின்னால் தள்ளி ஒரு திரையைப் போட்டுவிட்டதால் அவை இல்லாமல் போய்விடாது. தன்னுடைய நிலைமையை உள்ளது உள்ளபடியே தெரிந்துகொள்வது நல்லது. தனது தவறான வாழ்வை விட்டுவிட ஆயத்தமாக இருந்தால் அதுவே நல்லது.
நீ என்னிடம் வரும்போது எல்லா தீய இயக்கங்களும் மேலே வந்து, தங்களைக் காட்டிக்கொள்ள நீ அனுமதித்து, அவற்றை அர்ப்பணித்தால், "நான் இப்படித்தான் இருந்தேன்" என்று சொல்லி, அதே சமயம் அப்படி இருக்கக்கூடாது என்கிற ஆர்வமும் இருந்தால், நீ என் முன்னால் நிற்கும் இந்த விநாடி மிக அதிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆம், சில வினாடிகளில் அந்தத் தீய இயக்கங்களை நீக்கி விடுவதற்கான உதவியை நீ பெற்றுவிடலாம். மாறாக, நீ ஒரு சிறிய புனிதவான் மாதிரி வந்துவிட்டு ஒன்றையும் பெற்றுக்கொள்ளாமல் திருப்தியோடு போய்விட்டாயானால் அதனால் அதிகப் பயனில்லை.
உயர் உணர்வு... அவ்வாறு செயல்படுகிறது, முன்பு ஒளி இல்லாத இடத்தில் ஒளியைக் கொண்டுவரும் ஒளிக்கதிரைப் போன்றது அது. உன்னைப் பொறுத்தவரையில் அந்தத் தவறான இயக்கத்தை நீக்க விரும்பும் உள நிலையில் நீ இருக்க வேண்டும். அதை ஒட்டிப் பிடித்துக்கொள்ள விரும்பக்கூடாது. அதை உன்னிடமிருந்து நீக்கிவிட மனப்பூர்வமாக விரும்புவாயானால் அது அப்படி முன்னால் வருவது மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.
மிக அருமை
பதிலளிநீக்கு