புதன், 4 மே, 2011

நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் - ஸ்ரீ அரவிந்தர்


உன்னுடைய உள்நோக்கிய ஒருமுனைப்பில் மட்டுமல்ல, உன்னுடைய புறச்செயல்களிலும் இயக்கங்களிலும் நீ சரியான மனோபாவம் கொள்ள வேண்டும்.

நீ எப்பொழுதும் உள்ளேயிருந்தே செயல்படக் கற்றுக்கொள்ள வேண்டும் - உன்னுடைய உள் ஜீவனிலிருந்து... புற ஜீவன் வெறும் கருவியாக மட்டுமே இருக்க வேண்டும், அது உன்னுடைய பேச்சை, சிந்தனையை அல்லது செயலை வற்புறுத்த அல்லது அவற்றிற்கு ஆணையிட ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது.

எல்லாம் அமைதியாக உள்ளிருந்தே செய்யப்பட வேண்டும் - வேலை செய்தல், பேசுதல், எழுதுதல் எல்லாம் உண்மையான உணர்வின் பாகமாகச் செய்யப்பட வேண்டும் - சாதாரண உணர்வின் சிதறிய அமைதியற்ற இயக்கத்துடன் அல்ல.

எந்த உள்ளத்துடனும் உணர்வுடனும் செய்யப்படுகிறது என்பதுதான் ஒரு செயலை யோகச் செயலாக ஆக்கும் - அந்தச் செயலே அல்ல.

எல்லாம் அக நிலைமையையே சார்ந்துள்ளது. ஒவ்வொரு நிகழ்ச்சியிலும் ஒவ்வொரு கணத்திலும் சரியான முறையில் செய்ய வேண்டுமானால் ஒருவன் சரியான உணர்வுடன் இருக்க வேண்டும் - மனத்தினால் வகுக்கப்படும் மாறாத ஒரு விதியைப் பின்பற்றிச் செய்ய முடியாது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக