ஏழையாக இருப்பவனைவிடப் பணக்காரனாக இருப்பவனால் நல்லவனாக, விவேகமுள்ளவனாக, புத்திசாலியாக, ஈகைக் குணம் உடையவனாக இருப்பது ஆயிரம் மடங்கு கஷ்டமானதாகும்.
ஈகைக் குணத்திலும் நான் பல நாடுகளிலும் பல மனிதர்களைப் பார்த்திருக்கிறேன், எல்லா நாடுகளிலுமே மிக ஏழையாக இருப்பவர்களே மிக அதிக ஈகைக் குணமுடையவர்களாக இருப்பதைக் கண்டேன். பை நிறைந்ததும் ஒருவனை ஒருவகை நோய் பிடித்துக்கொள்கிறது. பணத்தின் மீது அற்புதமான ஒரு பற்று. நான் உறுதியாகக் கூறுவேன், அது ஒரு சாபம்.
ஆகவே உன்னிடம் பணம் இருந்தால் நீ செய்ய வேண்டிய முதல் காரியம் அதைக் கொடுத்துவிடுவதே. ஆனால், விவேகமில்லாமல் கொடுக்கக் கூடாது. பரோபகாரிகள் என்பவர்கள் கொடுப்பதைப் போல் கொடுக்கக் கூடாது. ஏனென்றால் அப்படிப் கொடுப்பவர்கள் உள்ளத்தில் தான் மிகவும் நல்லவன், ஈகைக் குணமுடையவன், முக்கியமானவன் என்கிற உணர்வு நிரம்பிவிடுகிறது. நீ சாத்வீக முறையில் செயல்பட வேண்டும். அதாவது, பணத்தை நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும்.
ஆகவே, ஒவ்வொருவனும், தன்னுடைய மிக உயர்ந்த உணர்வு நிலையிலிருந்து தன்னிடமுள்ள பணத்தை மிகப் பயனுள்ள வகையில் செலவிடுவது எப்படி என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். புழக்கத்தில் இருந்தால்தான் பணத்திற்கு மதிப்பு உண்டு என்பது முற்றிலும் உண்மை. பணத்தைச் செலவு செய்யும்போதுதான் அதனால் பயன் உண்டாகிறது. எல்லோருடைய விஷயத்திலும் அப்படித்தான்.
செல்வம் ஒரு சக்தி - முனூபே ஒரு தடவை நான் உங்களுக்கு இதைச் சொல்லியிருக்கிறேன் - அது இயற்கையின் ஒரு சக்தி, அது புழக்கத்திற்கு ஒரு சாதாரணமாக ஓர் இயங்கு சக்தியாக இருக்க வேண்டும். ஓடும் நீர் ஓர் இயங்கு சக்தியாக இருப்பதைப்போல. அது பொருள்களை உற்பத்தி செய்ய இணைத்து உருவாக்க உதவும். பணம் ஒரு வசதியான சாதனம், உண்மையில் அது பொருள்கள் முழு அளவிலும் தாராளமாகவும் புழக்கத்தில் இருக்கச் செய்ய பயன்படும் ஒரு சாதனம் மட்டுமே.
இந்த சக்தி, யார் அதை மிகச்சிறந்த முறையில் பயன்படுத்துவார்களோ அவர்கள் கையில் இருக்க வேண்டும். அதாவது, நான் தொடக்கத்தில் சொன்னதுபோல், ஏதோவொரு வகையில் சொந்த ஆசையையும் எல்லாவிதப் பற்றுகளையும் அறுத்துவிட்டவர்கள் கையில் இருக்க வேண்டும். இதோடு அவர்கள் இப்பூவுலகின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் பரந்த அறிவு விளக்கம் உடையவர்களாகவும் இந்தத் தேவைகளையெல்லாம் இணைத்து உருவாக்குவது எப்படி என்கிற பூரண ஞானமும், இந்தச் சாதனங்களைக் கொண்டு பண சக்தியைப் பயன்படுத்தும் திறமையும் உடையவர்களாகவும் இருக்க வேண்டும்.
இத்துடன் இந்த ஜீவர்களிடம் உயர்ந்த ஆன்மீக ஞானமும் இருந்தால் அவர்களால் இந்த சக்தியைப் பயன்படுத்தி தெய்வ ஆற்றல், சக்தி, அருள் ஆகியவற்றை வெளிப்படுத்தும் திறனுடையதான ஒன்றை புவி மீது படிப்படியாக உருவாக்க முடியும்.
- அன்னை
புதன், 4 மே, 2011
செலவிடும் போதே பணத்திற்கு மதிப்பு ஏற்படுகிறது
கல்வியும் சுதந்திரமும் - அன்னை
இங்கு தரப்படும் கல்வியின் சிறந்த அம்சம் என்னவென்றால் அது சுதந்திரத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது. சுருக்கமாகச் சொல்வதென்றால் இங்குள்ள வாழ்க்கை அதிகபட்சமான செயல் சுதந்திரத்தை அடிப்படையாகக் கொண்டதாகும். அதாவது இங்கு விதிகள், சட்டதிட்டங்கள், கட்டுப்பாடுகள் மிகக் குறைந்தபட்சமாக உள்ளன.
பெரும்பாலும் பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளுக்கு எப்படி கல்வியூட்டுகிறார்கள்? "இதைச் செய்யாதே", "நீ அதைச் செய்யக்கூடாது", "இதைச் செய்", "போ, அதைச் செய்" என்று கட்டளையிட்டபடி இருக்கிறார்கள். கட்டளைகள், விதிகள் என்றால் உங்களுக்குத் தெரியும், அந்தக் கல்வி முறைக்கும் இங்கு பின்பற்றப்படும் முறைக்கும் நிறைய வேறுபாடு உள்ளது.
மற்றெல்லா இடங்களிலுமுள்ள பள்ளிகளிலும் கல்லூரிகளிலும் இங்குள்ளவற்றை விட மிகவும் கண்டிப்பான விதிகள் உண்டு. ஆகவே, முன்னேற வேண்டும் என்னும் கண்டிப்பான விதி எதையும் உங்கள் மீது சுமத்தாததால் நீங்கள் விரும்பிய போது முன்னேறுகிறீர்கள், விரும்பாதபோது முன்னேறுவதில்லை, எவ்வளவு மெதுவாகச் செல்ல முடியுமோ அவ்வளவு மெதுவாகச் செல்கிறீர்கள் (மிகச் சாவதானமாக எல்லவற்றையும் செய்கிறீர்கள்) ஒருவருமே முயற்சி செய்யவில்லை என்று சொல்லமாட்டேன். முயற்சி செய்கிறவர்களும் சிலர் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் தன்னியல்பாக முயல்கிறார்கள்.
ஆன்மீக நோக்கிலிருந்து பார்க்கும்போது இது கோடி மடங்கு அதிகப் பயனுள்ளது. முன்னேற வேண்டியதின் தேவையை உன்னுள் உணர்வதனால், இயல்பாக ஒரு தூண்டுதல் உன்னை முன்னே தள்ளுவதனால் செய்யும் முன்னேற்றம் ஒரு விதியாக உன்மேல் சுமத்தப்படும் முன்னேற்றத்தைவிட ஆன்மீக நோக்கில் கோடி மடங்கு உயர்வானது. காரியங்களை நன்றாகச் செய்ய வேண்டுமென உன்னுள் முயல்கின்றவையெல்லாம் தன்னியல்பாகவும், நேர்மையுடனும் அப்படிச் செய்ய முயல்கின்றன. அந்தத் தூண்டுதல் உன் உள்ளே இருந்தே வருகின்றது. நன்றாகச் செய்தால் வெகுமதிகள் கிடைக்கும், மோசமாகச் செய்தால் தண்டனைகள் கிடைக்கும் என்று சொன்னதனால் அன்று. நமது கல்வி முறை அந்த அடிப்படையில் அமையவில்லை.
ஒரு குறிப்பிட்ட நேரத்தில் உனது முயற்சியைப் பாராட்டும் வகையில் ஏதாவது வரலாம். ஆனால் அதை மனதில் கொண்டு நீ முயற்சி செய்யவில்லை அதாவது, இந்தப் பாராட்டு முன்னாலேயே அறிவிக்கப்படவில்லை, செய்யத் தவறினால் தண்டனைகள் கிடைக்கும் என்ற பயமுறுத்தலும் அதோடு இணைக்கப்படவில்லை. அந்த வழக்கம் இங்கே இல்லை. நன்றாகச் செய்தோம் என்ற உணர்ச்சியே எல்லா வெகுமதிகளிலும் சிறந்த வெகுமதியாகத் தோன்றும்படி இங்கு வழி வகுக்கப்பட்டுள்ளது.
ஒருவன் மோசமாகச் செய்யும்போது அவன் தனக்குத்தானே தண்டனை கொடுத்துக் கொள்கிறான், அவன் சங்கடப்படுகிறான், மகிழ்ச்சியை இழக்கிறான், மனத்தில் அமைதியின்றி இருக்கிறான், இதுவே மிகவும் கண்கூடாக அவன்பெறும் தண்டனை. ஆகவே, ஆன்மீக வளர்ச்சி நோக்கில் இந்த இயக்கங்களெல்லாம், அவை ஒரு புறச்சட்டத்தின் விளைவாக வருவதைவிடக் கோடி மடங்கு அதிகப் பயனுடையவைகளாக இருக்கின்றன.

உணவும் உயர் வாழ்க்கையும் - அன்னை
நீ இந்தச் சாதாரண வாழ்க்கையிலிருந்து உயர்ந்ததொரு வாழ்க்கைக்குப் போக விரும்பினால் உணவு பற்றிய பிரச்சனை கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாக ஆகிறது. உயர் வாழ்க்கையை அடைந்துவிட்டபின், உருமாற்றத்திற்கு உன்னைத் தயாரிக்க நீ முயல்வதாயிருந்தால் இந்தப் பிரச்சனை அதிக முக்கியத்துவம் பெறும்.
ஏனெனில் சில உணவுகள் உடல் நுண்மையாவதற்கு உதவுகின்றன. வேறு சில அதை விலங்கு நிலையிலேயே வைத்திருக்கின்றன என்பதில் சந்தேகமில்லை. ஆனால் அந்தக் காலத்தில்தான் அது அதிக முக்கியத்துவம் பெறுகிறது, அதற்கு முன்பு அன்று. அந்தக் காலத்தை அடைவதற்கு முன் செய்ய வேண்டியவை எத்தனையோ உள்ளன.
உன்னுடைய உடலைத் தூய்மை செய்ய எண்ணுமுன் மனத்தையும் பிராணனையும் தூய்மை செய்வது நல்லது என்பதில் சந்தேகமில்லை. ஏனெனில் நீ எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுத்துக்கொண்டு உடலளவில் உடலை நுண்மையாக்குபவைகளைத் தவிர வேறொன்றையும் உட்கொள்ளாதபடி கவனமாக இருந்தபோதிலும், உன்னுடைய மனமும் பிராணனும் ஆசை, உணர்வின்மை, இருள், வெறி முதலியவைகள் கொண்ட நிலையில் இருந்தால், அதனால் எந்த நற்பயனும் ஏற்படாது. அதனால் ஏற்படும் ஒரே பயன், உன் உடல் அகவாழ்வுடன் இணைப்புக்கெட்டுப் பலவீனமடையும், முடிவில் நோய்வாய்ப்படும்.
தூய்மை செய்யும் வேலை உள்ளேயிருந்து தொடங்க வேண்டும் என்று முன்பே ஒரு தடவை சொல்லியிருக்கிறேன். மேலேயிருந்து தொடங்கு வேண்டும். முதலில் உயர் பகுதிகளைத் தூய்மை செய்யவேண்டும், பிறகு கீழ்ப்பகுதிகளை தூய்மை செய்யவேண்டும். உடலால் எல்லாவிதமான கீழ்த்தரமான காரியங்களையும் செய்ய வேண்டுமென்று சொல்லவில்லை. நான் சொல்வது அது அன்று. உங்களுடைய ஆசைகளை அடக்க வேண்டாம் என அறிவுரை கூறுவதாக எடுத்துக்கொள்ளாதே! நான் சொல்வதன் பொருள் அதுவே அன்று.
நான் என்ன சொல்கிறேன் என்றால், மனத்திலும் பிராணனிலும் ஓரளவாவது தேவதூதன் போல் ஆவதற்குமுன் உடலில் தேவதூதன் ஆக முயலாதே என்பதுதான். அது வழக்கத்திற்கு மாறான முறையில் உன்னிடம் இணைப்புகோட்டை உண்டாக்கும். அது முன்னதைவிட மோசமாக இருக்கும். சமநிலை பிறழாமலிருப்பதே எல்லாவற்றிலும் முக்கியமானது என்று ஏற்கனவே சொல்லியிருக்கிறேன். சமநிலை பிறழாமலிருக்க வேண்டுமானால் எல்லாம் ஒரே நேரத்தில் முன்னேறவேண்டும்.
உனது ஜீவனின் ஒரு பாகத்தை இருளில் விட்டுவிட்டு மற்றொரு பகுதியை ஒளிக்குக் கொண்டுவர முயலக்கூடாது. எந்த மூலையும் இருளில்லாதபடி நீ கவனமாகப் பார்த்துக்கொள்ள வேண்டும்.

அகங்கார முடிச்சை வெட்டு - அன்னை
அகங்கார முடிச்சு என்பது என்ன?
முடிச்சு? அது ஒரு உருவகம். ஆனால், அது நல்ல உறுதியான கயிற்றினால் போடப்பட்ட முடிச்சைப்போல உன்னை நன்றாக இறுக்கிப் பிடித்துக் கொண்டிருக்கிற ஒன்று. ஆகவே ஆன்மிகப் பாதையில் உண்மையாகவே முன்னேற வேண்டுமானால் முதற்காரியமாக அகங்கார முடிச்சை வெட்டிவிட வேண்டும் என்று சொல்லப்படுகிறது.
இது ஒரு நல்ல உருவகம், கருத்தை விளக்கமாகக் கூறுகிறது, அல்லவா? - உன்னைக் கட்டிப் போட்டிருக்கிறது. உனக்குள்ளேயே நீ அடைபட்டுக் கிடக்கிறாய், சிறையில் அடைக்கப்பட்டதைப் போல ஜீவனின் எல்லாப் பாகங்களும் சேர்த்துக் கட்டிப் போடப்பட்டிருப்பதால்தான் - ஒட்டியிருத்தல் ஏற்பட்டிருக்கிறது. ஆனால், அதே சமயம் அது வரம்பிற்கு உட்படுத்துகிறது.
உன்னைக் கட்டியிருக்கும் கயிற்றிலுள்ள முடிச்சுகளெல்லாம் சேர்ந்து உண்டாக்கிய ஓட்டிற்குள் அடைபட்டிருப்பதால் நீ பெற விரும்பும் அத்தனை சக்திகளையும் உன்னால் பெற முடியாது போகிறது.
அகங்கார முடிச்சை வெட்டுவது எப்படி?
எப்படி வெட்டுவதா? அது இருப்பதை உணர்ந்துகொண்டதும் ஒரு வாளை எடுத்து வீசு (சிரிப்பு). பொதுவாக அது இருப்பதை நீ உணர்வதில்லை. நமக்கு நேர்வதெல்லாம் மிகவும் சகஜமாகவே நமக்குத் தோன்றுகிறது. மிகவும் சகஜமானது என்பது உண்மைதான், ஆனால் நாம் அது நல்லது என்றும் நினைத்துவிடுகிறோம். ஆகவே, இந்த முடிச்சுகளெல்லாம் நம்மை இறுக்கிக் கட்டிப்போட்டிருக்கின்றன என்பதை உணர்வதற்கு மிகுந்த அறிவுத் தெளிவு தேவைப்படுகிறது.
அதன்பின், நம்மை ஒரு முடிச்சு இறுக்கிக் கட்டிப்போட்டிருக்கிறது - அதைக் கழற்ற முடியாதபடி அவ்வளவு இறுகலாகக் கட்டிப் போட்டிருக்கிறது - என்பதை உணர்ந்தபின், தனது இச்சா சக்தியை மிகக் கூர்மையான வாளின் அலகாகப் பாவித்துக்கொண்டு, தன் முழு சக்தியையும் கொண்டு இந்த முடிச்சை வெட்ட வேண்டும் (கற்பனை வாளால்தான், உண்மையிலேயே வாளைத் தூக்கிவிடுவதில்லை), இது நல்ல பலனைக் கொடுக்கும். ஆம், உளவில் நோக்கிலிருந்தும் இந்த வேலையைச் செய்யலாம்.
இந்த முடிச்சு எவற்றால் ஆகியிருக்கிறது, உன்னை மிகக்குறுகிய இடத்திற்குள் பிடித்து அடைத்து வைத்திருக்கிற எதிர்ப்புகள், பழக்கங்கள், விருப்பு வெறுப்புகள் எவை என்பதைக் கண்டுபிடிக்க வேண்டும். அவை இருப்பதைத் தெரிந்து கொண்டபின் நீ ஒருமுனைப்பட்டு, இறைவனது சக்தியையும் அருளையும் அழைத்து, எதனாலும் பிரிக்க முடியாதபடி நெருங்கிச் சேர்ந்துள்ள அந்த உருவமைப்பிற்கு சரியான அடி ஒன்று கொடுக்க வேண்டும்.
அதோடு அந்தச் சமயத்தில், இவற்றிற்கெல்லாம் நான் செவிகொடுக்கமாட்டேன், தெய்வ உணர்விற்கு மட்டுமே செவிகொடுப்பேன், சொந்த இலாப நஷ்டங்களைப் பற்றிக் கவலைப்படாமல், எந்தப் பற்றுதல்களும் இல்லாமல், எந்த விருப்பு வெறுப்புகளும் இல்லாமல், வெற்றி, அதிகாரம், சுயதிருப்தி, இடம்பம் இவற்றையெல்லாம் விரும்பாமல் தெய்வ வேலை ஒன்றையே செய்வேன், வேறு எந்த வேலையையும் செய்யமாட்டேன் என்று தீர்மானம் செய்துகொள்ளவும் வேண்டும்.
....அவையெல்லாம் மறந்துவிட வேண்டும், தெய்வ சித்தம் ஒன்றே உனது இச்சாசக்தியில் உருவெடுத்து உன்னைச் செயல்படச் செய்வதை நீ காண வேண்டும். அப்பொழுது, இந்த முறையில், அகங்காரம் உன்னைவிட்டு அகலும்.

தீய தூண்டுதல்களும் சிந்தனைகளும் - அன்னை
அன்னையே, நாங்கள் உம்மிடம் வரும்போது, எவ்வளவு நல்லவர்களாக இருக்க முடியுமோ அவ்வளவு நல்லவர்களாக இருக்க விரும்புகிறோம். அதாவது மிக நல்ல சிந்தனைகளுடன் வர விரும்புகிறோம். ஆனால் பெரும்பாலும் அதற்கு மாறாக பகலில் எங்களிடமிருந்த எல்லாத் தீய தூண்டுதல்களும் தீய சிந்தனைகளும் முன்னுக்கு வருகின்றன.
ஒருவேளை நீ அவற்றை நீக்கிவிடுவதற்கு வசதியாக அவை வரலாம். அவை வந்தால் அவற்றை அர்ப்பணித்து அவை உன்னிடமிருந்து நீங்கவேண்டும் என்று கேட்கலாம். அதுவேதான் காரணமாக இருக்கலாம், உயர் உணர்வு தூய்மை செய்வதற்காக வேலை செய்வதால் அவ்வாறு நடக்கலாம். குறைகளை மறைப்பதில் பயனில்லை, அவற்றைப் பின்னால் தள்ளி ஒரு திரையைப் போட்டுவிட்டதால் அவை இல்லாமல் போய்விடாது. தன்னுடைய நிலைமையை உள்ளது உள்ளபடியே தெரிந்துகொள்வது நல்லது. தனது தவறான வாழ்வை விட்டுவிட ஆயத்தமாக இருந்தால் அதுவே நல்லது.
நீ என்னிடம் வரும்போது எல்லா தீய இயக்கங்களும் மேலே வந்து, தங்களைக் காட்டிக்கொள்ள நீ அனுமதித்து, அவற்றை அர்ப்பணித்தால், "நான் இப்படித்தான் இருந்தேன்" என்று சொல்லி, அதே சமயம் அப்படி இருக்கக்கூடாது என்கிற ஆர்வமும் இருந்தால், நீ என் முன்னால் நிற்கும் இந்த விநாடி மிக அதிகப் பயனுள்ளதாக இருக்கும். ஆம், சில வினாடிகளில் அந்தத் தீய இயக்கங்களை நீக்கி விடுவதற்கான உதவியை நீ பெற்றுவிடலாம். மாறாக, நீ ஒரு சிறிய புனிதவான் மாதிரி வந்துவிட்டு ஒன்றையும் பெற்றுக்கொள்ளாமல் திருப்தியோடு போய்விட்டாயானால் அதனால் அதிகப் பயனில்லை.
உயர் உணர்வு... அவ்வாறு செயல்படுகிறது, முன்பு ஒளி இல்லாத இடத்தில் ஒளியைக் கொண்டுவரும் ஒளிக்கதிரைப் போன்றது அது. உன்னைப் பொறுத்தவரையில் அந்தத் தவறான இயக்கத்தை நீக்க விரும்பும் உள நிலையில் நீ இருக்க வேண்டும். அதை ஒட்டிப் பிடித்துக்கொள்ள விரும்பக்கூடாது. அதை உன்னிடமிருந்து நீக்கிவிட மனப்பூர்வமாக விரும்புவாயானால் அது அப்படி முன்னால் வருவது மிகவும் பயனுள்ளதாயிருக்கும்.

உனது சிறந்த நண்பன் - அன்னை
உன்னை மிகவும் தாழ்ந்த மட்டத்திற்கு வர ஊக்குவிக்கிறவன், அவனோடு சேர்ந்து முட்டாள்தனமான காரியங்களைச் செய்ய அல்லது தவறான வழிகளில் செல்ல ஊக்குவிக்கிறவன், நீ செய்கிற அசிங்கமான காரியங்களுக்காக உன்னைப் பாராட்டுகிறவன் உன்னுடைய நண்பன் என்பதில் சந்தேகமில்லை...
யாருக்காவது தொற்றுநோய் இருந்தால் நாம் அவனுடன் நெருங்கிப் பழகமாட்டோம், கவனமாக அவனிடமிருந்து விலகிவிடுவோம். பொதுவாக அவனிடமிருந்து அந்த நோய் பிறருக்கும் பரவிவிடாமலிக்க அவனை ஒரு தனி இடத்தில் ஒதுக்கி வைப்பார்கள். தீயொழுக்கம், தவறான நடத்தை, கயமை, பொய், கீழ்மை இவையெல்லாம் எந்தத் தொற்று நோயையும்விட மோசமான தொற்று நோய்களாகும், இவற்றை வெகு கவனமாகத் தவிர்க்க வேண்டும்.
எவன் உன்னுடைய தவறான அல்லது அசிங்கிமான செயல்களில் பங்கு கொள்ள மறுக்கிறானோ, தவறான செயல்களைச் செய்யத் தூண்டுதல் ஏற்படும்போது அதை எதிர்த்து நிற்க எவன் உன்னை ஊக்குவிக்கிறானோ அவனே உன் நண்பன். அவனையே உன்னுடைய சிறந்த நண்பனாக நீ கருதவேண்டும். அப்படிப்பட்டவனுடன்தான் நீ பழகவேண்டும், எவனுடன் வேடிக்கைகளில் ஈடுபடலாமோ, எவன் உன்னுடைய தீய குணங்களைப் பலப்படுத்துகின்றானே அவனுடன் அன்று. அவ்வளவுதான்.
இதை நான் திரும்பத் திரும்பச் சொல்ல விரும்பவில்லை. நான் யாரை மனத்தில் கொண்டு இதைச் சொல்கிறேனோ அவர்கள் புரிந்துகொள்வார்கள் என்று நம்புகிறேன்.
உண்மையில், யார் உன்னைவிட அறிவுடையவர்களாக இருக்கிறார்களோ, யாருடைய கூட்டுறவு உன்னைச் சான்றோனாக்குகிறதோ, உன்னை நீ அடக்கி ஆளவும், முன்னேறவும், நன்றாகச் செயல்படவும், விஷயங்களை மேலும் தெளிவாகக் காணவும் உதவுகிறதோ அவர்களையே நீ நண்பர்களாகத் தேர்ந்தெடுக்க வேண்டும்.
இறுதியாக, நீ பெறக்கூடிய மிகச் சிறந்த நண்பன், எல்லாவற்றையும் சொல்லக்கூடிய, உன்னை முற்றிலும் திறந்துகாட்டக்கூடிய நண்பன் இறைவனே அல்லவா? எல்லாக் கருணையின் ஊற்றும், திரும்பவும் செய்யாவிட்டால் நமது பிழைகளையெல்லாம் துடைத்துவிடக்கூடிய சக்தியின் ஊற்றும், உண்மையான சித்திக்கு வழியைத் திறப்பவனும் அவனே அல்லவா? எல்லாவற்றையும் புரிந்து கொள்ளக்கூடியவனும், பாதையில் தவறாமல், தடுமாறாமல், வீழ்ந்துவிடாமல், இலட்சியத்தை நோக்கி நேரே நடந்துசெல்ல உதவுகிறவனும் அவனே.
அவனே உண்மையான நண்பன், வாழ்விலும் தாழ்விலும் நீங்காத நண்பன், உன்னைப் புரிந்துகொள்ளக்கூடிய, குணமாக்கக்கூடிய நண்பன், வேண்டும்போது எப்பொழுதும் ஓடிவரும் நண்பன். நீ மனப்பூர்வமாக அழைத்தால் உனக்கு வழிகாட்டவும், உன்னைத் தாங்கவும் அவன் எப்பொழுதும் இருப்பான் - அதோடு உண்மையான முறையில் உன்னை நேசிப்பான்

ஞாயிறு, 1 மே, 2011
ஸ்ரீ அன்னை
ஸ்ரீ அன்னை
’கடவுள் நீ விரும்புவதையெல்லாம் உனக்குக் கொடுத்து விடுவதில்லை. எதை அடைய உனக்குத் தகுதி இருக்கிறதோ அதை மட்டுமே கொடுக்கிறார்’ இப்பொன் வாசகத்திற்குச் சொந்தக்காரர் பிளாஞ்சி ராக்சேல் மிரா. ஆனால் அப்படிச் சொன்னால் அவரை யாருக்கும் தெரியாது. ’மதர்’ என்றாலும் ’ஸ்ரீ அன்னை’ என்றாலும் தான் தெரியும்.
கலைகளுக்கும் செழுமைக்கும் சொந்தமான நாகரிக நாடான பிரான்ஸில் பிறந்த மிரா, இளம் வயதிலேயே ஆன்மீக ஆற்றல்கள் பெற்றவராக விளங்கினார். வளர வளர இந்தியத் தத்துவங்களால் ஈர்க்கப்பட்டார். ஸ்ரீ அரவிந்தரை ஞானகுருவாகக் கனவில் கண்டவர், பின் பாண்டிச்சேரியை நாடி வந்து அவரையே முழுமையாகச் சரணடைந்தார். ஸ்ரீ அன்னை ஆனார்.
1878 ஆம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 21 ஆம் தேதி பாரிசில் மிரா பிறந்தார். இளம் வயதிலேயே அறிவாற்றல் மிக்கவராகவும், எளியோருக்கு இரங்கும் குணம் கொண்டவராகவும் விளங்கினார். இயல்பிலேயே ஆன்மீக நாட்டம் கொண்டிருந்த அவருக்கு தினம்தோறும் தியானத்தில் ஆழ்வதும், இறை ஒளியை தரிசிப்பதும் வழக்கமாக இருந்தது. அவருக்கு அடிக்கடி ஒரு கனவு வரும். அந்தக் கனவில் மெள்ள மெள்ள தன் உடலை விட்டு வெளியேறுவார். வீடு, தெரு, நகரம் என எல்லாவற்றிலும் உயர்ந்து மேகக் கூட்டங்களினிடையே காட்சி அளிப்பார். பொன்னொளி வீசிக் கொண்டிருக்கும் அவர் உடலை, ஒளீவீசக் கூடிய ஒரு நீண்ட பட்டாடை தழுவிக் கொண்டிருக்கும். அவரை நோக்கி உலகின் எல்லாப் பக்கங்களிலிருந்தும், ஆண்களும், பெண்களும், குழந்தைகளும், முதியோர்களும், நோயாளிகளும், துன்பமுற்றவர்களும் வந்து நிற்பர். தனது கருணை பொங்கும் விழியால் அவர்களைப் பார்ப்பார் மிரா. ஒளீவீசும் அவருடைய பட்டாடையைத் தொட்டவுடன் சிலருக்குப் பிணி தீரும். சிலருக்கு மகிழ்ச்சி உண்டாகும். சிலரது குறைகள் உடனடியாக விலகும். மகிழ்ச்சியுடனும், அமைதியுடனும், அவர்கள் தங்கள் இருப்பிடம் திரும்பிச் செல்வர். தொடர்ந்து ஒரு வருடத்திற்கும் மேலாக இக்கனவு அவருக்கு வந்து கொண்டிருந்தது. பிற்காலத்தில் மிர்ரா அன்னையாக உயர்ந்த போது, அவர் அளித்த பால்கனி தரிசனத்திற்கு முன் மாதிரியாய் இக்கனவு அமைந்திருந்தது
பிரான்சில் அன்னை வசித்த போது அவரது கனவில் பல்வேறு ஆன்மீகப் பெரியவர்களும் தோன்றி பல உண்மைகளை அவருக்கு போதித்தனர். அவர்களுள் ஒளி வீசும் கண்களுடனும், நீண்ட தாடியுடனும் ஒரு மனிதர் அடிக்கடி வந்தார். அவர், இந்தியத் தத்துவங்கள் பற்றியும், வேத உபநிஷத்துகள் பற்றியும் எடுத்துரைத்தார். ஓவியத்தில் தேர்ச்சி பெற்றிருந்த அன்னை அவரது உருவத்தை ஓவியமாக வரைந்து கொண்டார். பிற்காலத்தில் பாண்டிச்சேரியில் ஸ்ரீ அரவிந்தரைத் தரிசித்த போது, அவரே தனக்கு கனவில் வந்து பல உண்மைகளை போதித்த ஆசான் என்பதையும், அவரே தனது குரு என்பதையும் கண்டு கொண்டார். அவரையே முழுமையாகச் சரணடைந்தார். தனது ஆன்ம ஆற்றலால் ஸ்ரீ அன்னையாக உயர்ந்தார். ஸ்ரீ அரவிந்தர் ஆசிரமத்தை ஒரு முன் மாதிரி ஆசிரமாக உருவாக்கினார். இந்தியாவின் யோக ஞான மரபு செழுமையுற உழைத்தார்.
ஒரு முறை ஆசிரமத்தில் உள்ள சாதகர்களுக்கு ஒரு சந்தேகம் ஏற்பட்டது. அரவிந்தரால் ‘ஸ்ரீ அன்னை’ என்ற நூலில் குறிப்பிட்டிருக்கும் அன்னையும் தங்களுடன் தற்போது இருக்கும் அன்னையும் ஒருவர் தானா என்று. தங்களின் சந்தேகத்தை அரவிந்தரிடமே கேட்டனர். அதற்கு ஸ்ரீ அரவிந்தர் ’சந்தேகமென்ன. அந்தப் பராசக்தியே இங்கே மானிட உருவில் சாதகர்களை வழி நடத்திச் செல்ல முன் வந்திருக்கிறாள். இதில் ஐயமே வேண்டாம்’ என்று விடையளித்தார்.
பராசக்தியின் அம்சமான அன்னை சாதகர்களை பல விதங்களில் ஊக்குவித்தார். எப்போதும் சுறுசுறுப்பாகப் பணியாற்றிக் கொண்டிருக்க வேண்டுவதன் அவசியத்தை எடுத்துரைத்தார். நேர்மை, உண்மை, சத்தியம், தூய்மை இவற்றைக் கொண்டதாக வாழ்வு அமைய வேண்டும் என்பதை வலியுறுத்தினார். ’Never look at the Future with the Eyes of Fears’ என்றும் Let not the talk of the vulgar make any impression to you என்றும் பலவாறாக அவர் போதித்த தத்துவங்கள் எண்ணற்றவை. மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு சகோதரர்களாக ஒருமித்த உணர்வுடன் வாழ வேண்டும் என்ற எண்ணத்தில் அவர் ‘ஆரோவில்’ நகரை நிர்மாணித்தார். இன்று அது ஒரு சர்வ தேச நகரமாகத் திகழ்கிறது.
ஸ்ரீ அன்னையால் பல்வேறு அற்புதங்களும் நிகழ்த்தப் பெற்றிருக்கின்றன.
ஒரு நாள் புதுவையில் பலத்த புயல் வீசியது. பல மரங்கள், வேரோடு சாய்ந்தன. கடல் பொங்கி உள்ளே வந்து ஆசிரமம் உட்பட பலவற்றை அழிக்கும் சூழல் உருவாகியது. மக்கள் உட்பட பலரும் செய்வதறியாது திகைத்தனர். என்ன செய்வதெனப் புரியாமல் ஸ்ரீ அன்னையிடம் வந்து வேண்டிக் கொண்டனர். அன்னையும் அவர்கள் வேண்டுகோளுக்கு மனமிரங்கினார். தியானத்தில் ஆழ்ந்தார். சூட்சும உருவில் சென்று கடல் தேவதையின் முன் நின்றார். ஆசிரமம் பற்றியும் சாதகர்கள் பற்றியும், அதன் நோக்கம் பற்றியும் விரிவாக எடுத்துரைத்தார். அப்பாவிகளை அழிப்பதால் நேரும் துன்பத்தைப் பற்றியும் தேவதைக்கு எடுத்துச் சொன்னார். பெரிய பெரிய கற்களைக் கொண்டு வரச் செய்து, அவற்றை கரையோரத்தில் போடச் செய்தார். அதைத் தாண்டி நகருக்குள்ளே வரக் கூடாது என்று கடல் தேவதைக்குக் கட்டளையிட்டார். அன்னையின் வார்த்தைக்குக் கட்டுப்பட்ட கடல் பின் வாங்கியது. அது முதல் அது, கற்கள் அடுக்கி வைக்கப்பட்டுள்ள தனது எல்லையைத் தாண்டி நகருக்குள் வருவதில்லை.
ஒரு முறை ஸ்ரீ அன்னை ஆசிரமத்து சாதகர்களுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென தனக்குள் சமாதி நிலையில் ஆழ்ந்தார். வெகு நேரம் கழித்தே அவர் தனது கண்களைத் திறந்தார். சாதகர்கள் காரணத்தை வினவிய பொழுது, தான் கிரீஸ் நாட்டிற்குச் சென்று விட்டு வந்ததாகவும், பல பக்தர்கள் மானசீகமாக தன் உதவி வேண்டி அழைத்ததால், சூட்சும உருவில் அங்கு சென்று உதவி விட்டு வந்ததாகவும் அன்னை குறிப்பிட்டார்.
ஆம், அன்னையைத் தேடி நாம் செல்ல வேண்டியதில்லை. நாம் மானசீகமாக, உண்மையாக அழைத்தால் அங்கு ஸ்ரீ அன்னையே நம்மைத் தேடி வருவார். ஸ்ரீ அன்னையே சாதகர்களிடம் இது குறித்து, ‘நேர்மையான பிரார்த்தனைகள் யாவும் நிறைவேற்றப்படுகின்றன. ஒவ்வொரு அழைப்புக்கும் நிச்சயம் பதில் உண்டு’ என்று தெரிவித்திருக்கிறார். அதிலும் ஸ்ரீ அன்னை குறிப்பிட்டுள்ள மலர்களை வைத்து வணங்கும் பொழுது அவரது ஆற்றல் அங்கே பலவாறாகப் பெருகுகிறது. அன்னையின் அருளைப் பெறத் தேவை நம்பிக்கையும், அர்ப்பணிப்பு உணர்வும் மட்டுமே.
ஸ்ரீ அன்னையின் அறிவுரைகள் சிலவற்றை அவரது பிறந்த நாளான இன்று நினைவு கூர்வோம்.
1. மனிதனின் அதிருப்திக்கு, சோகத்திற்கு, தோல்விகளுக்கு அவனுடைய தான் என்ற எண்ணமே, அகந்தையே மிக முக்கிய காரணம் ஆகிறது.
2.’பக்தி’ என்பது தனக்காக இறைவனிடம் வேண்டிக் கொள்வது அல்ல. இறைவனுக்காகத் தன்னை முழுமையாக அர்ப்பணித்துக் கொள்வதே உண்மையான பக்தி
3. நீ எப்படி இருந்தாய் என்பதை நினைத்துக் கவலைப்பட்டுக் கொண்டிருக்காதே! எப்படி இருக்க விரும்புகிறாய் என்பதை மட்டும் நினை. நீ நிச்சயம் முன்னேறுவாய்
4. நம் அவநம்பிக்கையே நம் குறைபாடுகளின் தோற்றுவாயாக இருக்கிறது. உயர்விற்குத் தேவை பூரண நம்பிக்கையே!
5. ஒருவன் எவ்வளவு நேரம் தியானம் செய்கிறான் என்பது ஆன்மிக முன்னேற்றத்தைக் காட்டாது. மாறாக தியானம் செய்ய எந்த முயற்சியுமே தேவையில்லை என்னும் நிலையை எட்டுவதே உண்மையான ஆன்மிக முன்னேற்றமாகும்.
6. இறைவனிடம், ‘நமக்கு அது வேண்டும், இது வேண்டும்’ என்று வேண்டுவதை விட, நமக்குத் தேவையானது எதுவோ, அதை, அவனே தருமாறு ஒப்படைப்பது சிறந்தது.
அன்னையைப் போற்றிடுவோம்; அவள் பாதம் பணிந்திடுவோம்
அன்னையும் காத்திடுவாள்; என்றும் ஆனந்தம் தந்திடுவாள்
ஓம் ஸ்ரீ ஆனந்தமயி;
ஓம் ஸ்ரீ சைதன்ய மயி;
ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!

இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)