நம்மை நாமேத் திருத்திக் கொள்வதால் சமுதாயச் சீர்திருத்தம் தானே நிகழும்,எனவே நம்மைச் சீர்திருத்திக் கொள்வோம்.பின் சமுதாயம் தானே சீர்திருத்தம் பெற்றுவிடும்!!
மகிழ்ச்சி என்பது மனிதனுக்கு உள்ளேயே இருப்பதுதானே அன்றி ,வெளியேயுள்ள புறக் காரணங்களால் வருவது அன்று!!
எல்லோருடைய உள்ளங்களிலும் இருக்கிறேன் என்று விளக்கும் உணர்வே ஸ்ரீ அன்னையின் உணர்வும் உண்மையும் ஆகும்!!
மனிதனின் உண்மையான அனுபவங்களின் வெளிப்பாடாக மலர்வதே மகிழ்ச்சியாகும்!!
தன் கடமைகளை முறையாகவும், ஒழுங்காக செய்வது மட்டுமே உண்மையான பக்தியும், கடவுளை வேண்டி நிற்பது மட்டுமே ஆசனமும் ஆகும்!!
நான் எனக்காக மட்டும் அல்ல என்று சொல், உனது வாழ்வின் பொறுப்புகளை எல்லாம் - நம்பிக்கைகளை எல்லாம் உண்மையிடம் அதாவது இறைவனிடம் ஒப்படைத்து விடு, அனைத்தும் சீராக நடக்கும்.
இறைவனது அருளைப் பெற விரும்புவதே உயர்ந்த ஞானம் ஆகும். அப்படிப்பட்ட உயர் ஞானத்தை அடைய வேண்டும் என்பதே நமது குறிகோளாக இருக்க வேண்டும்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக