புதன், 10 நவம்பர், 2010

கடன் தொல்லை தீர்க்கும் புஷ்பாஞ்சலி

[Annai_Aurobindo_Page_34.jpg]

நம்மை சுற்றியுள்ள எதிர்மறை சக்தியிலிருந்து விடுபட

[Annai_Aurobindo_Page_08.jpg]

அகந்தையை ஒழிப்போம்

[Annai_Aurobindo_Page_24.jpg]

நிம்மதி தரும் சாவித்திரி

[Annai_Aurobindo_Page_25.jpg]

மலர்களில் உயர்ந்த தாமரை


* வாழ்க்கையில் மணம் பரப்பி மேன்மை தருபவை அழகு மலர்கள். நெஞ்சை அள்ளும் கொள்ளை அழகு, மனம் கவரும் நறுமணம், நோய் தீர்க்கும் மருத்துவகுணம், இறையருளை வாரி வழங்கும் தன்மை என்று மலர்களுக்கு மகத்துவமான குணங்கள் ஏராளம்.

* அன்றாட பிரச்னைகளுக்குக் கூட மலர்கள் தீர்வு தருகின்றன என்ற உண்மையை ஒவ்வொருவரும் உணரவேண்டும். எந்த மலருக்கு என்ன மகத்துவம் என்பதை அறிந்து மலரினைத் தேர்வு செய்ய வேண்டும்.

* அன்பு, பக்தி, நம்பிக்கை, ஆனந்தம் போன்ற நல்ல குணங்களை நம் மனதில் உண்டாக்கி, ஆன்மிகப்பாதையில் உயர்வுள்ளவர்களாக மாற்றும் சக்தி மலர்களுக்கு இருக்கின்றன என்பதை உணர வேண்டும்.

* ஞானியர்கள் தாமரை மலரை விரும்புவார்கள். மலர்களில் உயர்ந்ததாக தாமரை மலர் போற்றப்படுகிறது. இம்மலர் இருக்குமிடத்தில் புத்துணர்ச்சியும், பொலிவும் உண்டாகும். இப்படி ஒவ்வொரு மலருக்கும் தனித்தன்மை இருப்பதால் மணம் மிக்க மலர்களை நாம் நேசிப்பவர்களாக இருத்தல் அவசியம்.
- ஸ்ரீ அன்னை

சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள்



* வாழ்க்கையின் சிரமம் மிகுந்த நேரங்களையும் , நோய்களையும், வேதனைகளையும் ஒதுங்கி நின்று பார்க்கக் கற்றுக் கொள்ளுங்கள். அவை எல்லாமே மாறி விடும் என்பதை உணருங்கள்.

* வெயிலும் கடுங்கோடையும் வந்தால் பின்னாலேயே மழையும் குளிருமாக ஒரு பருவம் வரக் காத்திருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.

* உடல் வேதனையையும், உள்ள வேதனைகளையும் தாங்கிக் கொள்ளவே முடியாது என்று நாம் நினைக்கிறோம். ஆனால், உண்மையில் நம்முடைய உடல் உள்ள அமைப்புகள் ஏற்றுக்கொள்ளும் சக்தி உடையதாக இருக்கிறது என்பதை யாரும் உணர்வதில்லை.

* வாழ்க்கை மிகவும் தீவிரமாக எடுத்துக் கொள்ளும் மனிதர்களுடன் அதிகமாகப் பழகாதீர்கள். உங்களைச் சுற்றியுள்ள சூழ்நிலை உங்களை நெருக்குவதாக நினைக்காதீர்கள். எல்லாவற்றையும் எளிமையுடன் லேசாக ஏற்கத் தயாராகுங்கள்.

* இறைவனை உங்கள் தோழனாகக் கருதுங்கள். அவனுடைய சோதனைகளை விளையாட்டாகவே ஏற்றுக் கொள்ளுங்கள். சிரிக்கக் கற்றுக் கொள்ளுங்கள். வாழ்க்கையில் வெற்றியும் மனப்பக்குவமும் கிடைக்க இதுவே சிறந்த வழி.
-ஸ்ரீஅன்னை

பலவீனமுள்ளவனே கோபிப்பான்

நோயாளி தனக்கு வைத்தியம் செய்யும் மருத்துவன் மீதும், தான் உண்ணும் மருந்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நோயாளி வைக்கும் நம்பிக்கையே அவன் நோயிலிருந்து சீக்கிரம் மீளும் ஆற்றலைத் தருகின்றது.
பலவீனமும், வன்முறையும் இணைந்து செல்பவையாகும். உண்மையான பலமுடையவன் ஒரு போதும் கோபப்படமாட்டான். இறைவனை முழுமையாக நேசிப்பவன் தன்னை அவனுக்கே சொந்தமாக்கிக் கொள்வான். அந்நிலையில் அவன் எதைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை. ஒருபோதும் இறைவன் கைவிடமாட்டான். நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அவற்றாலேயே சூழப்பட்டிருப்போம். நீங்கள் இழிவான பொருட்களைப் பற்றி எண்ணினால் நிச்சயம் இழிவான சூழலில் மாட்டிக் கொள்வீர்கள்.

அதனால் உங்கள் சிந்தனை எப்போதும் உயர்வானவையாக இருக்கட்டும். வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனுக்காக வாழ்தலாகும். இறைவனும் உண்மையும் வேறுவேறல்ல. இறைவனே உண்மையாகும். உண்மையே இறைவனாகும். ண எந்த அளவிற்கு இறைவனை அறிகிறோமோ, அந்த அளவிற்கு நம் துன்பங்கள் நம்மை விட்டு விலகுவதை உணர்வீர்கள். அதனால் இறைசிந்தனையிலிருந்து விலகாது இருங்கள்.