புதன், 10 நவம்பர், 2010

பலவீனமுள்ளவனே கோபிப்பான்

நோயாளி தனக்கு வைத்தியம் செய்யும் மருத்துவன் மீதும், தான் உண்ணும் மருந்தின் மீதும் நம்பிக்கை கொள்ள வேண்டும். நோயாளி வைக்கும் நம்பிக்கையே அவன் நோயிலிருந்து சீக்கிரம் மீளும் ஆற்றலைத் தருகின்றது.
பலவீனமும், வன்முறையும் இணைந்து செல்பவையாகும். உண்மையான பலமுடையவன் ஒரு போதும் கோபப்படமாட்டான். இறைவனை முழுமையாக நேசிப்பவன் தன்னை அவனுக்கே சொந்தமாக்கிக் கொள்வான். அந்நிலையில் அவன் எதைக் கண்டும் அஞ்சத்தேவையில்லை. ஒருபோதும் இறைவன் கைவிடமாட்டான். நாம் எதைப் பற்றி சிந்திக்கிறோமோ அவற்றாலேயே சூழப்பட்டிருப்போம். நீங்கள் இழிவான பொருட்களைப் பற்றி எண்ணினால் நிச்சயம் இழிவான சூழலில் மாட்டிக் கொள்வீர்கள்.

அதனால் உங்கள் சிந்தனை எப்போதும் உயர்வானவையாக இருக்கட்டும். வாழ்வின் உண்மையான நோக்கம் இறைவனுக்காக வாழ்தலாகும். இறைவனும் உண்மையும் வேறுவேறல்ல. இறைவனே உண்மையாகும். உண்மையே இறைவனாகும். ண எந்த அளவிற்கு இறைவனை அறிகிறோமோ, அந்த அளவிற்கு நம் துன்பங்கள் நம்மை விட்டு விலகுவதை உணர்வீர்கள். அதனால் இறைசிந்தனையிலிருந்து விலகாது இருங்கள்.

1 கருத்து: