சனி, 22 ஜனவரி, 2011

மகான் ஸ்ரீ அரவிந்தர்

மகான் ஸ்ரீ அரவிந்தர் ஒரு சுதந்திரப் போராட்ட வீரர். தவிர அவர் ஓர் இலக்கியவாதி. மெத்தப்படித்தவர். எழுத்தாளர், பத்திரிக்கையாளர், கட்டுரை ஆசிரியர், இதழாளர், கல்லூரிப் பேராசிரியர் என பல பதவிகள் வகித்தவர். பத்துக்கும் மேற்பட்ட மொழிகள் அறிந்தவர். அவரது பிறந்த நாளில் தான் பாரத நாடு விடுதலை அடைந்தது. பாரதத்தின் தவப் புதல்வராக விளங்கிய அவரது வாழ்க்கை வரலாற்றை சற்றே சுருக்கமாகப் பார்ப்போம்.

1872 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி, கிருஷ்ண தன கோஷ்-சுவர்ண லதா தேவி தம்பதியினருக்கு மூன்றாவது குழந்தையாய் அரவிந்தர் அவதரித்தார். அவருக்கு அரவிந்த் அக்ராய்ட் கோஷ் என்று பெயர் சூட்டப்ப்பட்டது. சிறுவனாக இருக்கும் போதே அவருக்கு ஆங்கிலமும், ஹிந்துஸ்தானியும் கற்றுத் தரப்பட்டது. அயர்லாந்த்து கன்னித்துறவியர்களால் நடத்தி வரப்பட்ட, டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் அவரது பள்ளிப் படிப்பு கழிந்தது. பின்னர் தனது கல்வியை அவர் இங்கிலாந்தில் தொடர்ந்தார். லத்தீன், பிரெஞ்சு உட்படப் பல மொழிகளைக் கற்றுக் கொண்யார். உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தும் கற்றுத் தேர்ந்தார்.

1884 ஆம் ஆண்டில், தனது பனிரெண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். ஜெர்மன், ஸ்பானிஷ் எனப் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார். கீட்ஸ், வோர்ட்ஸ் வொர்த், ஷேக்ஸ்பியர் என பலரது இலக்கியங்களையும் கற்றுத் தேர்ந்தார். பின் உலகப் புகழ்பெற்ற கேம்ப்ரிட்ஜ் கல்விக் கூடத்தில் தனது மேற்படிப்பைத் தொடர்ந்தார்.

அதே சமயம் பாரதம் வறுமையில் வாடுவது, அந்நியரின் பிடியில் சிக்கித் தவிப்பதும் அவர் கவனத்துக்கு வந்தது. அதற்காக மிகவும் மனம் வருந்தியவர், அந்நிலை மாறுவதற்கு உழைக்க உறுதி பூண்டார். கேம்பிரிட்ஜிலுள்ள ‘இந்தியன் மஜ்லிஸ்’ என்னும் அமைப்பில் தன்னை இணைத்துக் கொண்டார். ‘சுதந்திரம் பெறுவதற்கு மிதவாதம் உதவாது’ என்பது இந்த அமைப்பினரின் கருத்து. இதனை அரவிந்தரும் ஏற்றுக் கொண்டார். எப்படியாவது பாரதத்திற்கு விடுதலை வாங்கித் தருவது என உறுதி பூண்டார். அதற்காக பல இரகசியச் சங்களில் சேர்ந்து உழைக்கலானார்.

இந்தச் சமயத்தில் பரோடாவின் சமஸ்தான மன்னர் தனது அலுவல் விஷயமாக லண்டன் வந்திருந்தார். அவரை தனது நண்பர் மூலம் சந்திக்கும் வாய்ப்பு அரவிந்தருக்குக் கிட்டியது. அரவிந்தரின் முகப் பொலிவு, அறிவுத் திறமை இதையெல்லாம் பார்த்த அரசர், தனது சமஸ்தானத்திற்கு வந்து, பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு வற்புறுத்தினார். அரவிந்தரும் அதற்கு இணங்கினார். இந்தியா புறப்பட்டுச் சென்றார். மன்னருக்கு உதவியாகப் பணியாற்றினார். பின் வருவாய்த்துறையிலும், முத்திரைத்தாள் துறையிலும் பணி புரிந்தார். பின்னர் தலைமைச் செயலகத்திலும் பணியாற்றினார். ஏழு ஆண்டுகள் இவ்வாறு பல வித அரசாங்க அலுவல்களைப் பார்த்த அரவிந்தர், பின்னர் பரோடா கல்லூரிக்கு ஆங்கிலப் பேராசிரியராக மாற்றப்பட்டார். தனது நேரத்தை தியானத்திலும், எழுத்துப் பணியிலும், புதிய நூல்கள் படிப்பதிலும் செலவிட்டார்.

1901 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 30 ஆம் நாள், கல்கத்தாவில், அரவிந்த கோஷூக்கும் பூபால் சந்திர போசின் மகளான குமாரி மிருணாளினிக்கும் திருமணம் நடந்தது. அப்பொழுது மிருணாளினியின் வயது 14. அரவிந்த கோஷின் வயது 29. திருமணம் முடிந்ததும் அவர் மீண்டும் பரோடாவிற்கு வந்து பணியாற்றினார். ஆனால் சமஸ்தான வேலையில் இருந்ததால் அவரால் நேரடி அரசியலில் ஈடுபட முடியவில்லை. அதனால் மறைமுகமாக அரசியலில் ஈடுபட ஆரம்பித்தார். புரட்சி உள்ளம் கொண்ட வீரர்களைத் தயார்படுத்தினார். அரவிந்தரின் இளைய சகோதரரான பரீந்தர நாத் எனப்படும் பரீன் இதற்குத் தலைமைப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.

இந்நிலையில் கர்சன் பிரபுவின் சூழ்ச்சியால் வங்கப் பிரிவினை ஏற்பட்டது. அதைக் கண்டு கொதித்தார் அரவிந்தர். அது இந்து-முஸ்லிம் பிரிவினைக்கே வழிவகுக்கும் என நினைத்த அவர் அதனை தீவிரமாக எதிர்த்தார். நாட்டிற்காகப் போராட முடிவு செய்து, தமது பரோடா சமஸ்தானப் பணியை உதறிவிட்டு, நேரடி அரசியலில் குதித்தார். அரவிந்தரின் முக்கிய நோக்கம் தேச விடுதலையே. எனவே அதற்கான சிந்தனையே அவர் மனம் முழுவதும் வியாபித்திருந்தது. பிபின்பால் அரவிந்தரின் உற்ற தோழராக விளங்கினார். இருவரும் இணைந்து பல்வேறு கூட்டங்களில் கலந்து கொண்டனர். நாடெங்கிலும் ஆங்கிலேயரால் தடை செய்யப்பட்டிருந்த ‘வந்தே மாதரம்’ கோஷம் எழும்பியது. ‘வந்தே மாதரம்’ என்ற இதழையும் பிபின் சந்திரபால் ஆரம்பித்தார். அதில் அரவிந்தர் பல் வேறு கட்டுரைகளை எழுதி வந்தார்.

அப்போது புரட்சிக்காரர்க்ளுக்கும், சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு பல கொடுமைகள் இழைக்கப்பட்டன. அத்தகைய கொடுஞ் செயல்களுக்கு கல்கத்தாவின் அப்போதைய நீதிபதிகளில் ஒருவரான கிங்ஸ் போர்டே காரணமாக இருந்தார். எனவே அவர் மீது புரட்சிக்காரர்கள் வஞ்சம் தீர்த்துக் கொள்ள எண்ணினர். போராளிகளான குதிராம் போஸ் என்பவரும் அவர் நண்பரான பிரபுல்ல சக்கியும் கிங்ஸ்போர்டை எப்படியாயினும் ஒழித்து விடுவது என உறுதி எடுத்துக் கொண்டனர். ஆனால் அவர்களது முயற்சி குறி தவறி இரு அப்பாவி ஐரோப்பியப் பெண்கள் கொல்லப்பட்டனர். இது நாடெங்கும் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியது.

தனது புரட்சிக் கருத்துக்கள் மூலம் ஏற்கெனவே ஆங்கில அரசுக்குச் சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்த அரவிந்தரை, இதில் சிக்க வைக்க அரசாங்கத்தினர் திட்டமிட்டனர். அரவிந்தரே இவர்களுக்கெல்லாம் தலைவர், அவர்தான் இவை அனைத்திற்கும் காரணம் என்று குற்றம் சுமத்தி அவரைக் கைது செய்தனர். அவரை அலிப்பூர் சிறைச் சாலைக்குக் கொண்டு போயினர். அரவிந்தரை மட்டுமல்லாமல் தீவிரவாதிகள் எனச் சந்தேகிக்கப்படும் ஹேமச் சந்திர சென், நளினி காந்த் குப்தா, தீன தயாள் போஸ், பரீன், எனப் பலரும் கைது செய்யப்பட்டனர்.

சிறைவாசம் அரவிந்தருக்கு முதலில் அளவிலாத துன்பத்தைத் தந்தது. ஆனால் நாளடைவில் அவருக்கு நல்ல மனப்பக்குவத்தையும் அது தர ஆரம்பித்தது. நடக்கும் அனைத்தும் இறைவனின் சித்தம் என்பதையும், அவனாலே தான் அனைத்தும் நடத்தப்படுகிறது என்பதையும், எல்லா தீமையிலும் ஓர் நன்மை உண்டு என்பதையும் அலிப்பூர் சிறைவாசம் அரவிந்தருக்கு மிகத் தெளிவாக உணர்த்தியது.

சிறையில் பல துன்பங்களை அவர் அனுபவிக்க நேர்ந்தது. அவற்றையெல்லாம் மிகுந்த மன உறுதியுடன் எதிர் கொண்டார். சகிப்புத் தன்மையுடன் வாழப் பழகிக் கொண்டார். தனக்குக் கிடைத்த ஓய்வு நேரங்களில் கீதை, வேதங்கள், உபநிஷத்துகள் எனப் பல நூல்களைப் படித்தார். யோகப் பயிற்சிகளை மேற்கொள்ளவும் அவருக்கு நேரம் கிடைத்தது. ஒரு வகையில் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்ளவும், வாழ்க்கையின் எல்லாப் பக்கங்களையும், மேடு, பள்ளங்களையும் தான் நன்கு அறிந்து கொள்ளவும் இறைவன் செய்த ஏற்பாடே இந்த சிறைவாசம் என்பதை அரவிந்தர் நன்கு உணர்ந்து கொண்டார்.

சிறையில் நாள் தோறும் அவருக்குப் பலவித ஆன்மிக அனுபவங்கள் ஏற்படலாயின. காணும் அனைத்தும் அந்தக் கண்ணனின் உருவே என்பதை அவர் உணர ஆரம்பித்தார். விவேகானந்தரின் ஆவி தன் அறைக்குள் வருவதையும், தனக்கு போதனை செய்ய விரும்புவதையும் அவர் உணர்ந்து கொண்டார். இறைவனின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார். தமக்குள் சில குரல்கள் ஒலிப்பதையும், அவை தம்மை வழி நடத்துவதையும் உணர்ந்தார். இந்தியாவின் விடுதலை நிகழ்ந்தே தீரும் என்றும் அதற்கேற்ற வழிவகைகள் உருவாக்கப்பட்டு விட்டன என்றும் எனவே இனி நீ மனித குல விடுதலைக்குத் தான் நீ உழைக்க வேண்டும் என்றும் அந்தக் குரல் அறிவுறுத்தியதாக அவர் உணர்ந்தார்.

இந்தியாவில் தொடரப்பட்ட புரட்சியாளர்கள் மீதான முதல் சதி வழக்கு அலிப்பூர் சதி வழக்கு தான் என்பதால் அதன் தீர்ப்பை நாடே எதிர்பார்த்தது. சித்தரஞ்சன் தாஸின் மிகிச் சிறப்பான வாதத்தின் மூலம் அரவிந்தர் உட்படப் பலர் விடுதலை செய்யப்பட்டனர். 1908, மே 5-ல் கைது செய்யப்பட்ட அரவிந்தர் 1906 மே, 6-ல் விடுதலை செய்யப்பட்டார்.

அதன் பின்னரும் நாட்டின் விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டார். நேரடியாக போராட்டத்தை தாமே முன்னின்று நடத்த உறுதி கொண்டார். கல்கத்தாவில் வாரம் தோறும் தொடர்ந்து பல கூட்டங்கள் போட்டார். தலைமை உரை ஆற்றினார். மக்களிடையே சுதந்திர வேட்கையைத் தூண்ட கர்மயோகி’ என்ற ஆங்கிலப் பத்திரிகையையும், ‘தர்மா’ என்ற வங்காள மொழிப் பத்திரிகையையும் தொடங்கினார். அவற்றில் வழக்கம் போல தனது அனல் பறக்கும் கட்டுரைகளை எழுதி மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்தினார். பாரிசால் மாநாட்டில் அவர் கலந்து கொண்டு அவர் ஆற்றிய எழுச்சி உரை மிக முக்கியமானதாய் அமைந்தது. அரசாங்கம் கொண்டு வந்த பல் வேறு சீர்த்திருத்தங்களை துணிவுடன் எதிர்த்தார். இதனால் எப்படியாயினும் அரவிந்தரை ஒழித்துக்கட்ட நினைத்த ஆங்கில அரசாங்கம் அவரை நாடு கடத்தத் திட்டமிட்டது. இதனை சகோதரி நிவேதிதா மூலம் அறிந்து கொண்ட அரவிந்தர், யாருக்கும் தெரியாமல் இரகசியமாகப் புறப்பட்டு, பிரெஞ்சு அரசாங்கத்தின் நேரடிப் பாதுகாப்பில் உள்ள சந்திர நாகூரை அடைந்தார். அது முதல் சந்திர நாகூரிலிருந்து அவரின் அரசியல் மற்றும் ஆன்மிக சாதனைகள் இரகசியமாகத் தொடரலாயிற்று.

பின்னர் ஒருநாள் தமக்குள் ஒலித்த இறைவனின் குரலுக்குக் கீழ்ப்படிந்து புதுச்சேரியை நோக்கிப் பயணப்பட்டார் அரவிந்தர்.


ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஸ்ரீ அரவிந்தர் வரலாறு

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
ஓம் ஸ்ரீ ஆனந்தமயி
ஓம் ஸ்ரீ சைதன்யமயி
ஓம் ஸ்ரீ சத்யமயி பரமே!


ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

ஸ்ரீ அரவிந்தரின் வரலாற்றை அறிய…

ஸ்ரீ அரவிந்த சரிதம்

ஸ்ரீ அரவிந்தர் வரலாறு

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

மகான் ஸ்ரீ அரவிந்தர்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!
திருப்பாத சரணம்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா


அரவிந்தர் பள்ளிச் சிறுவனாக

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா


சிறையிலிருந்து வெளிவந்த பின்…

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

யோகி ஸ்ரீ அரவிந்தர்

அந்தக் கண்களை உற்றுப் பாருங்கள் அதில்தான் எவ்வளவு ஒளி…

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

மகா யோகியாக உயர்ந்த பின் எப்படிப் பொன்னுடல் ஒளி வீசுகிறது என்று பாருங்கள்….

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா

ஸ்ரீ அரவிந்தரின் வரலாற்றை அறிய…

ஸ்ரீ அரவிந்த சரிதம்

ஸ்ரீ அரவிந்தர் வரலாறு

ஸ்ரீ அன்னையும் ஸ்ரீ அரவிந்தரும்

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

மகான் ஸ்ரீ அரவிந்தர்

ஆகஸ்க்ட் 15 அன்று பாரத சுதந்திர தினம். யோகி ஸ்ரீ அரவிந்தரின் பிறந்த தினமும் கூட. அவரது வாழ்விலிருந்து சில சம்பவங்களை இங்கே நினைவு கூர்வோம்.

கல்கத்தாவில் வாழ்ந்து வந்த டாக்டர் கிருஷ்ண தன கோஷ் – சுவர்ண லதா தேவி தம்பதியினருக்கு, 1872 ஆம் ஆண்டு, ஆகஸ்டு மாதம் பதினைந்தாம் தேதி, மூன்றாவது குழந்தையாய் அரவிந்தர் பிறந்தார்.



மாஸ்டர் அரவிந்தர்

டார்ஜிலிங்கில் உள்ள லோரட்டோ கான்வென்ட்டில் அவரது பள்ளிப் படிப்பு கழிந்தது. பின்னர் தனது கல்வியை இங்கிலாந்தில் தொடர்ந்தார் அரவிந்தர். லத்தீன், பிரெஞ்சு உட்படப் பல மொழிகளைக் கற்றுக் கொண்டார். உலக இலக்கியங்கள், வரலாறு, புவியியல் என அனைத்தையும் விரைவிலேயே கற்றுத் தேர்ந்தார். 1884 ஆம் ஆண்டில், தனது பனிரெண்டாவது வயதில் மேற்படிப்புக்காக லண்டன் சென்றார். அங்குள்ள புகழ் பெற்ற செயின்ட் பால்ஸ் பள்ளியில் சேர்க்கப்பட்டார். கல்வியை முடித்த பின் இந்தியா திரும்பினார்.

ஆனால் அரவிந்தர் வந்த கப்பல் விபத்துக்குளாகி விட்டது என்ற வதந்தியைக் கேள்விப்பட்ட அவரது தந்தை மாரடைப்பால் காலமானார். மனத்தைத் தேற்றிக் கொண்ட அரவிந்தர் பரோடா சமஸ்தானத்தில் பணியில் அமர்ந்தார். பின் அங்குள்ள கல்லூரியின் பேராசிரியராக உயர்ந்தார். நாளடைவில் சுதந்திரதாகத்தால் ஈர்க்கப்பட்டார். அதற்கான பணிகளில் ஈடுபட்டார்.

மகான் அரவிந்தர்

அதனால் வெகுண்ட அங்கிலேயே அரசு அவரைக் கைது செய்து அலிப்பூர் சிறையில் அடைத்தது. சிறையில் ஸ்ரீ விவேகானந்தர், ஸ்ரீ கிருஷ்ணரின் தரிசனம் அரவிந்தருக்குக் கிடைத்தது. மனம் யோக மார்க்கத்தில் திரும்பியது. சில வருடங்களுக்குப் பின் புதுச்சேரிக்கு வந்து சேர்ந்தார். அங்கு தீவிர யோக சாதனையில் ஈடுபட்டார். அவ்ரை நாடி வந்த ஸ்ரீ அன்னை அவரது பணிகளுக்கு உறுதுணையாக இருந்தார். மானிடன் அதி மானிட நிலைக்கு உயர வேண்டு என்று உழைத்தார். தெய்வீக சக்தியை புவிக்கு இறங்கி வரவேண்டும் அதி தீவிரமாக முயற்சித்தார். அவர் 1926ம் ஆண்டு ஆகஸ்ட் 15 தனது பிறந்த நாள் அன்று ஓர் அறிவிப்பை வெளியிட்டார். தன் யோக சாதனையில் கடந்த ஆண்டு வரை இருந்த தடைகள் முற்றிலுமாய் விலகி விட்டன என்றும், இனி விரைவில் பல மகத்தான செயல்கள் நடக்கும் என்றும் அவர் அறிவித்தார்

அதே ஆண்டு நவம்பர் 24 அன்று சாதகர்கள் அனைவரும் ஸ்ரீ அன்னை, ஸ்ரீ அரவிந்தர் முன் அமர்ந்து தியானத்தில் மூழ்கினர். சற்று நேரத்தில் ஒரு மிகப் பெரிய பேரொளி மேலிருந்து கீழே இறங்கி வருவதை அனைவரும் உணர்ந்தனர். தங்கள் தலைக்கு மேலே ஓர் தெய்வீக சக்தி வியாபிப்பதை அறிந்து பரவசப்பட்டனர். மேலிலிருந்து இறங்கியது ஸ்ரீ கிருஷ்ண பரமாத்மாவின் சக்தி என்றும், மேல் நிலை மனத்திற்கான புதிய திரு உரு மாற்றப்பணி தொடங்கி இருப்பதாகவும் ஸ்ரீ அரவிந்தர் அறிவித்தார். அன்று முதல் அது ஆசிரமத்தில் சித்தி நாள்என்று கொண்டாடப்படலாயிற்று.

யோகி அரவிந்தர்

டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி. 1950 ஆம் வருடம். இறையாற்றலை புவி மீது இறக்கு அதி மனிதனை உருவாக்க வேண்டும் என்று அயராது பாடுபட்ட மகாயோகி அரவிந்தர் மகா சமாதி அடைந்தார். ஸ்ரீ அரவிந்தர் இறந்தும் அவரது உடல் ஒளிவீசிக் கொண்டிருந்தது. கிட்டத்தட ஐந்து நாட்கள் அந்த மகா யோகியின் உடல் வாடாமல் இருந்தது. பின்னர் டிசம்பர் 9 ஆம் நாள். ஸ்ரீ அரவிந்தர் உடல் கருங்காலி மரப்பெட்டியில் வைக்கப்பட்டு, ஆசிரம முற்றத்தில் உள்ள, ஸர்வீஸ் மரத்தடியில், ஆசிரம சாதகர்களின் முன்னிலையில் நல்லடக்கம் செய்யப்பட்டது..

இன்றும் ஸ்ரீ அரவிந்தர் – ஸ்ரீ அன்னை இருவரும் தம்மை நாடி வருவோருக்கு நல்வழி காட்டிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

ஓம் நமோ பகவதே ஸ்ரீ அரவிந்தாயா!

அன்னையின் மலர் வழிபாடு

அன்னையின் மலர் வழிபாடு

ஸ்ரீ அன்னை

அன்னை வலியுறுத்திய வழிபாடுகளில் மிக முக்கியமானது மலர் வழிபாடு. அன்னைக்கு மலர்களின் மீது அளவற்ற விருப்பம் உண்டு. அதன் தூய்மை, புத்துணர்ச்சி, அழகு, சுயநலமின்மை ஆகியவற்றைப் பற்றி அவர் புகழ்ந்துரைத்திருக்கிறார். ஆசிரமத்தில் தானே ஒரு தோட்டத்தை உருவாக்கி அதில் அழகான பல மலர்களை நட்டு தம் இறுதிக்காலம் வரை பராமரித்து வந்திருக்கிறார். ‘மலர்கள் இயற்கை அன்னையின் எழில் மிகு வடிவங்கள்’ என்பது ஸ்ரீ அன்னையின் கருத்தாகும்.

ஸ்ரீ அன்னை, சுமார் எண்ணூறிற்கும் மேற்பட்ட மலர்களைப் பற்றி, அவற்றை வைத்து இறைவனை வழிபடுவதால் ஏற்படும் பலன்கள் பற்றி சாதகர்களிடம் தெரிவித்திருக்கிறார். அவற்றைப் பற்றி நாமும் தெரிந்து கொண்டு பயனடைவோம்.

____________________________________________________________________________________________
மலர் பலன்
____________________________________________________________________________________________

ரோஜா குறைகள் விலகும். தடைகள் அகலும். வெற்றி தரும்

மல்லிகை சோதனைகள் நீங்கும், இன்பம் பெருகும்

துளசி மனத்தூய்மை பெருகும். பக்தி சிறக்கும்

சாமந்தி வலிமை, புது சக்தி உண்டாகும். பகைகள் விலகும்

செம்பரத்தை தெய்வீக அன்பு கிடைக்கும்

நித்திய கல்யாணி முன்னேற்றம் தரும்.

எருக்கம்பூ வல்லமை, தைரியம், மன உறுதி தரும்

செந்தாமரை தெம்பு, வலிமை, புத்துணர்ச்சி, உயர்வு தரும்

வெண்தாமரை தெய்வீக உணர்வு மேம்படும். மன மாசுக்கள் அகலும்

காகிதப்பூ பாதுகாப்பு உணர்வு மிகும்.

வாடாமல்லி நோயற்ற தன்மை, ஆயுள் விருத்தி, ஆபத்துக்கள் விலகும்

செவ்வரளி தவறுகள் விலகி, ஒழுங்குகள் ஏற்படும்

மரிக்கொழுந்து வெற்றியைத் தரும்

பவழ மல்லி நியாயமான ஆசைகள் நிறைவேறும்

நந்தியாவட்டை புத்துணர்ச்சி தரும். மனத்தூய்மை உண்டாகும்

ஸ்ரீ அன்னையைப் பணிவோம். ஆனந்தம் பெறுவோம்.